Pages

Saturday, October 1, 2011

விப்ரோ டெக்னலாஜிஸ் நிறுவனத்துக்கு 2011-ம் ஆண்டுக்கான மைக்ரோ சாப்ட் விருது

பெங்களூர்: விப்ரோ டெக்னலாஜிஸ் நிறுவனத்துக்கு 2011-ம் ஆண்டுக்கான மைக்ரோ சாப்ட் விருது கிடைத்துள்ளது.

இந்தியாவில் தகவல் தொழில் நுட்ப முன்னோடி நிறுவனமாக விளங்குகிறது, பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் விப்ரோ.

இந்நிறுவனம் அமெரிக்காவின் மைக்ரோ சாப்ட் நிறுவன விருதுக்கு இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

உலகளவில் புதிய மென்பொருள்களை உருவாக்குவதிலும், மேம்படுத்துவதிலும் சிறந்து விளங்கும் நிறுவனங்களில் விப்ரோவும் ஒன்றாகத் திகழ்கிறது.

இந்நிலையில், உலகளவில் சிறந்த சாப்டுவேர் நிறுவனமான மைக்ரோ சாப்ட், பன்முக மென்பொருள், தகவல் தொழில் நுட்பம் மற்றும் சாப்ட்வேர் தயாரிப்புத் துறையில் சிறந்து விளங்கும் நிறுவனங்களுக்கு 2011-ம் ஆண்டுக்கான விருதினை விப்ரோ நிறுவனத்துக்கு வழங்குகிறது.

இந்த விருதை பெற உலகம் முழுவதும் உள்ள 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றன.

"தகவல் தொழில் நுட்பத் துறையில் எங்களின் மென்பொருள் தயாரிப்பு எங்களின் திறமைக்கு கிடைத்த அங்கீகாரமாக இதை கருதுகிறோம்' என்று விப்ரோ நிறுவனத்தின் வர்த்தகச் சேவைக்கான மூத்த உதவி தலைவர் ஸ்ரீனி பல்லியா கூறினார்.

இதன் மூலம் விப்ரோவின் சர்வதேச அளவிலான வாடிக்கையர் வட்டம் மேலும் விரிவடையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.